குஜிலியம்பாறை அருகே மினி லாரியில் மதுபாட்டில் கடத்தியவர் கைது
குஜிலியம்பாறை அருகே மினி லாரியில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார்.
குஜிலியம்பாறை:
குஜிலியம்பாறை அருகே பாளையத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடியில் குஜிலியம்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக கர்நாடகாவில் இருந்து காய்கறிகள் ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று வந்தது. சந்தேகத்தின்பேரில் அந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அதில், காய்கறி மூட்டைக்குள் மறைத்து வைத்து 80 மதுபாட்டில்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் லாரியில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் குஜிலியம்பாறை அருகே உள்ள லந்தக்கோட்டை முத்தக்காபட்டியை சேர்ந்த சுரேஷ் (வயது 33) என்பது தெரியவந்தது. இதையடுத்து சுரேசை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து லாரி மற்றும் அதில் கடத்தி வந்த 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story