மாவட்ட செய்திகள்

ஆட்டோ டிரைவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் + "||" + Provide relief to auto drivers

ஆட்டோ டிரைவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்

ஆட்டோ டிரைவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ டிரைவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் இந்து முன்னணியினர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
தேனி: 

இந்து முன்னணி தேனி மாவட்ட பொதுச்செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர்கள் உமையராஜன், கார்த்திக், இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி நகர தலைவர் ரவிக்குமார் மற்றும் நிர்வாகிகள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். 

மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜாவிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கொரோனா ஊரடங்கால் ஆட்டோ தொழிலாளர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமும் ஆட்டோ ஓடினால் தான் ஆட்டோ டிரைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உணவு உண்ண முடியும் எனும் நிலை உள்ளது. எனவே, முழு ஊரடங்கு அமலில் உள்ள வரை ஆட்டோ டிரைவர்களுக்கு இழப்பீடாக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், 

வாகனங்களின் பெயரில் பெறப்பட்ட கடன் தொகைக்கான தவணை தொகையை செலுத்த ஊரடங்கு காலம் வரை விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும். நல வாரியத்தில் பதிவு செய்தவர்கள் மற்றும் பதிவு செய்யாதவர்கள் என அனைத்து ஆட்டோ டிரைவர்களுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.