மாவட்ட செய்திகள்

திறன் வளர்ப்பு பயிற்சி + "||" + practice

திறன் வளர்ப்பு பயிற்சி

திறன் வளர்ப்பு பயிற்சி
உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
தொண்டி, 
திருவாடானை வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி காணொலி காட்சி மூலம் 3 நாட்கள் நடைபெற்றது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் டாம் பி சைலஸ் தலைமை தாங்கினார். வேளாண்மைத் துணை இயக்குனர் கண்ணையா மற்றும் வேளாண்மை அலுவலர் சீதாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 100 பேர் கொண்ட குழுக்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வாயிலாக வேளாண் இடுபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது, கூட்டு பண்ணையம் திட்டத்தின் கீழ் செயல்படும் குழுக்களுக்கு வழங்கும் மானிய திட்டங்கள் மற்றும் முன்னுரிமைகள் குறித்து விரிவாக காணொலி கட்சி மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். ராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் ராஜா, வேளாண்மை உதவி இயக்குனர் நாகராஜன், தேசிய உணவு பாதுகாப்பு இயக்க மாவட்ட ஆலோசகர் ஸ்ரீதர் ஆகியோர் பயிற்சியில் கலந்து கொண்டு திறன் வளர்ப்பு பயிற்சி குறித்து தொழில்நுட்ப கருத்துகளை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி செய்திருந்தார்.