மாவட்ட செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் + "||" + Congress party protests in Villupuram district

விழுப்புரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம், 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் விழுப்புரத்தில் 5 பெட்ரோல் பங்குகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.டி.வி.சீனிவாச குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. 
இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் நாராயணசாமி, ராஜ்குமார், குப்பன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் விசுவநாதன், ராஜேஷ், சேகர், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராம், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தன்சிங், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராஜமாணிக்கம், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர்கள் மதியழகன், ரவிக்குமார், ஸ்ரீகாந்த், சீனிவாசன், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

திண்டிவனம்

இதேபோல் விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல், எரிவாயு விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதை கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும் திண்டிவனம் மேம்பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். திண்டிவனம் நகர தலைவர் விநாயகம், விக்கிரவாண்டி நகர தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் இருதயராஜ், நகர துணைத்தலைவர் தட்சணாமூர்த்தி, நகர பொதுச்செயலாளர் பொன் ராஜா, வக்கீல் அஜிஸ், வட்டார தலைவர் கோவிந்தன், ஜெய்கணேஷ், சாமிநாதன் உள்பட பலா் கலந்து கொண்டனர். 

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டியில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் ஜனார்த்தனன், முன்னாள் கவுன்சிலர் ராஜபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் குமார் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. இதில் வட்டார துணைத்தலைவர் நாகராஜ், மாவட்ட நிர்வாகி ராஜேந்திரன், அய்யனார், இளைஞர் காங்கிரஸ் தலைவர் லோகேஷ், கண்ணையன், ஊடக பிரிவு சேது, ராமு, செல்வா உள்பட பலர் கலந்து கொண்டனர். செஞ்சி திண்டிவனம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரில் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் வக்கீல் ரங்கபூபதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் தினகரன், மாவட்ட துணைத்தலைவர் சண்முகம், வட்டார தலைவர் ஏ.ஜி.சரவணன், நகர தலைவர் இ.சரவணன், தொழிற்சங்கம் சூரியமூர்த்தி, மாவட்ட விவசாய அணி ஜோவாதாஸ், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா, தொகுதி இளைஞரணி தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் செஞ்சி விழுப்புரம் சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் செஞ்சி நகர பொறுப்பாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் சீனிவாசன், அன்பு, ஜெயசுதா, லட்சுமி, சக்தி, ஷரீப் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மேலும் வட்டார காங்கிரஸ் சார்பில் களையூரில் வட்டார தலைவர் சுப்பிரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசலுக்கான மாநில அரசின் வரியை குறைக்க வேண்டும் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்
பெட்ரோல், டீசலுக்கான மாநில அரசின் வரியை குறைக்க வேண்டும் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்.
2. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் நூதன ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் நூதன ஆர்ப்பாட்டம்
3. பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் குறைக்க முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் குறைக்க முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
4. பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை
பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
5. வரலாறு காணாத உச்சம்; ராஜஸ்தானில் டீசல் விலையும் ரூ.100 ஆக உயர்வு
எரிபொருள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருப்பது வாகன ஓட்டிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.