கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது


கஞ்சா கடத்திய  2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 11 Jun 2021 9:52 PM IST (Updated: 11 Jun 2021 9:52 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டம் கம்பத்தில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கம்பம்: 

கம்பம் கோசந்திர ஓடை அருகே கம்பம் வடக்கு போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி, மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்தனர். 

அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 விசாரணையில் அவர்கள், பழனிசெட்டிபட்டியை சேர்ந்த ஆதவன் (வயது 29), கோடாங்கிபட்டியை சேர்ந்த கமலக்கண்ணன் (25) என்றும், கம்பத்தில் இருந்து தேனிக்கு கஞ்சாவை கடத்தி செல்வதும் தெரியவந்தது. 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story