கோவிலுக்குள் புகுந்து அம்மன் நகையை திருடிய வாலிபர் கைது
கோவிலுக்குள் புகுந்து அம்மன் நகையை திருடிய வாலிபர் கைது
கோவை
கோவை சிங்காநல்லூரை அடுத்த நீலிகோணம்பாளையத்தில் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு அம்மன் சிலையையும் பிரதிஷ்டை செய்து வணங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை கோவில் திறந்து இருந்தது. அப்போது அங்கு சாமி கும்பிடுவது போல் வாலிபர் ஒருவர் கோவிலுக்கு வந்தார்.
அவர், யாரும் கவனிக்காத நேரத்தில் அம்மன் சிலையில் இருந்த தங்க சங்கிலியை நைசாக திருடி விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித் தார்.
இதை பார்த்து அதிர்ச்சி கோவில் பூசாரி சத்தம் போட்டார். உடனே அங்கிருந்தவர்கள் விரைந்து சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
இதில் அவர் ஒண்டிப்புதூரை சேர்ந்த செந்தில்பிரபு (வயது 36) என்பதும், அவர், சாமி கும்பிடுவது போல் நடித்து அம்மன் சிலையில் இருந்த நகையை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து நகை மீட்கப்பட்டது. கோவிலுக்குள் புகுந்த வாலிபர் அம்மன் சிலையில் இருந்த நகையை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story