அமராவதி பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் காற்று காரணமாக மண்ணில் சாய்ந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

x
தினத்தந்தி 11 Jun 2021 10:28 PM IST (Updated: 11 Jun 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

அமராவதி பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் காற்று காரணமாக மண்ணில் சாய்ந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தளி, 

அமராவதிஅணை
அமராவதி அணை பாசனத்தில் நெல் சாகுபடியே பிரதானமாகும். அணைக்கு ஏற்படுகின்ற நீர்வரத்து மற்றும் நீர் இருப்பை பொறுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பருவமழை கை கொடுத்து உதவினால் மட்டுமே 2 போகம் நெல் சாகுபடி மேற்கொள்ளலாம். அதுமட்டுமின்றி அமராவதி ஆறு மூலமாக கிணறு ஆழ்குழாய் கிணறுகளில் ஏற்படுகின்ற நிலத்தடி நீரைக்கொண்டு தென்னை, வாழை, காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. 
அமராவதி அணை மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை கை கொடுத்து உதவியதால் அணையின் நீர் இருப்பு 70 அடிக்கும் மேலாக இருந்து வருகிறது. இதனால் முதல் போக சாகுபடி முடிவடைந்து 2-ம் போகத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்போது அறுவடை நிலையில் உள்ளது.
நெல் சாகுபடி
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
அமராவதி கல்லாபுரம் உள்ளிட்ட பகுதியில் நெல் சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. முதல் போக சாகுபடியில் குலை நோய் தாக்குதல் ஏற்பட்டு முழுமையான விளைச்சலை ஈட்ட முடியவில்லை. ஏராளமான விவசாயிகள் முதலீட்டு தொகையை திரும்பப் பெற முடியாமல் நஷ்டம் அடைந்தனர். அணையில் நீர் இருப்பு இருந்ததால் 2-ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து நெல் சாகுபடியில் தீவிரம் காட்டி வந்தோம். பயிர்கள் வளர்ந்து கதிர்கள் பிடித்து பால் தருவாயில் வெள்ளைபுஞ்சை ஏற்பட்டது. அதை கட்டுப்படுத்துவதற்கு போராடியபோது மழை பெய்து பயிர்களை காப்பாற்றியது. அதன் தாக்குலில் இருந்து மீண்டு பயிர்களை அறுவடைக்கு கொண்டு வந்தோம்.
தளி, ஜூன்.12-

சாய்ந்த நெற்பயிர்கள்
இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மழை பெய்தது. அதன்பின்பு அவ்வப்போது பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் பயிர்கள் நெல் மணிகளின் எடையை தாங்க முடியாமல் மண்ணில் சாய்ந்து விட்டது. இதன் காரணமாக எந்திரத்தின் மூலமாக அறுவடை பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பயிர்கள் செங்குத்தாக இருந்தால் மட்டுமே நெல்மணிகளை எந்திரத்தின் மூலம் முழுமையாக சேகரித்து விற்பனை செய்வதற்கு ஏதுவாக இருக்கும். இதனால் கடந்த முறை போன்று இந்த முறையும் நஷ்டம் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கு முன்வர வேண்டும். 
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story