6 போலீஸ் துணை சூப்பிரண்டுகள் அதிரடி இடமாற்றம்
6 போலீஸ் துணை சூப்பிரண்டுகள் அதிரடி இடமாற்றம்
கோவை
கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சூரியமூர்த்தி, தென்காசி மாவட்ட குற்றப்புலனாய்வு போலீஸ் துணை சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
எனவே கருமத்தம்பட்டிக்கு மதுரை மாவட்டம் சமயநல்லூரில் போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றிய ஆனந்த் ஆரோக்கியராஜ் நியமிக்கப்பட்டு உள்ளார்.
விழுப்புரம் சரகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய திருமால் பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார். இங்கு பணியாற்றிய சீனிவாசலு ராமநாதபுரம் மாவட்ட நில அபகரிப்பு சிறப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ஆக மாற்றப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் துணை சூப்பிரண்டு ஜெய்சிங், மேட்டுப்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டாக மாற்றப்பட்டார். இங்கு பணிபுரிந்த ஆரோக்கியராஜ் தென்காசி மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.
பெரியநாயக்கன்பாளையம் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, கன்னியாகுமரி மாவட்ட நில அபகரிப்பு சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். இங்கு பணிபுரிந்த பீட்டர் பால் துரை காத்திருப்போர் பட்டியலில் உள்ளார்.
வால்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் நெல்லை மாநகரில் காலியாக உள்ள சமூக நீதி மற்றும் மனித உரிமை உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி துணை சூப்பிரண்டு சிவக்குமார், சிவகங்கை மாவட்ட நில அபகரிப்பு பிரிவு துணை சூப்பிரண்டாக மாற்றப்பட்டார். இங்கு பணியாற்றிய மோகன் தம்பிராஜன் காத்திருப்போர் பட்டியலில் உள்ளார்.
இதற்கான உத்தரவை தமிழக டி.ஜி.பி. திரிபாதி வெளியிட்டு உள்ளார். கோவை மாவட்டத்தில் 6 போலீஸ் துணை சூப்பிரண்டுகள் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story