விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பெண்கள் பலி


விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பெண்கள் பலி
x
தினத்தந்தி 11 Jun 2021 10:34 PM IST (Updated: 11 Jun 2021 10:34 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பெண்கள் பலியானார்கள். மேலும் 387 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்குகிறது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 39 ஆயிரத்து 278 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 302 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 34 ஆயிரத்து 935 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர். 

இந்த நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் மேலும் 387 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 665 ஆக உயர்ந்தது

2 பெண்கள் பலி

மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மயிலத்தை சேர்ந்த பெண், விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63 வயது மூதாட்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 609 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

Next Story