இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தின் மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தின் மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
திருப்பூர்
இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தின் மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கொரோனா ஊரடங்கால் ஆட்டோ, வேன், கார் தொழிலாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். தினந்தோறும் ஆட்டோ, கார் ஓடினால் தான் டிரைவர்கள் வாழ்க்கை நடத்த முடியும். இந்தநிலையில் தற்போது ஊரடங்கு நெருக்கடி நிலையில் இருந்து ஆட்டோ, வேன், கார் தொழிலாளர்களை காப்பாற்ற அரசு சலுகைகளை அறிவிக்க வேண்டும்.
மாதம்தோறும் ரூ.5,000 ஆட்டோ, வேன், கார் டிரைவர்களுக்கு இழப்பீடாக பொது முடக்கம் அமலில் இருக்கும் வரை வழங்க வேண்டும். வாகனங்களில் இன்சூரன்ஸ், பெர்மிட், சாலை வரி ஆகியவற்றை தமிழக அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும். வாகனங்களின் பெயரில் பெறப்பட்ட கடன் தொகையை செலுத்த ஊரடங்கு முடியும் வரை விலக்கு அளிக்க வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story