பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ்
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பூர் மாநகரில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு மாநகர மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இரு சக்கர வாகனத்துக்கு மாலை அணிவித்து பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வைக் கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதுபோல் போயம்பாளையம், அவினாசி ரோடு, பி.என். ரோடு, நல்லூர், பல்லடம் ரோடு, ஊத்துக்குளி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் கருப்பசாமி, சின்னசாமி, கார்த்தி, வெங்கடேஷ், ஈஸ்வரன், கோவிந்தராஜ், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
வடக்கு மாவட்ட காங்கிரஸ்
திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தாராபுரம் ரோடு பல வஞ்சிபாளையம் அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் கோபி தலைமை தாங்கினார். கொரோனாவால் மக்கள் பாதிக்கப்படும் நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையை உயர்த்தி வருவதை எதிர்த்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் சிறுபான்மை பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முத்து இஸ்மாயில், பெஞ்சமின், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சகாபுதீன், மனித உரிமை துறையின் மாவட்ட செயலாளர் சாதிக், தெற்கு வட்டார பொதுச்செயலாளர் அப்பாஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பல்லடம்
பல்லடம் பனப்பாளையம் பெட்ரோல் நிலையம் முன்பு திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் கே.ஜி. பாலசுப்பிரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஆராக்குளம் ரவி, சத்தியமூர்த்தி, முருகதாஸ், ரவி கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பல்லடம் திருச்சி ரோடு பெட்ரோல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். செயல் தலைவர் மணிராஜ், சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டை பெட்ரோல் நிலையம் முன்பு பல்லடம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் புண்ணியமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல பல்லடம் கணபதிபாளையம் பெட்ரோல் நிலையம் முன்பு பல்லடம் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் கணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பிரகாஷ், ஜேம்ஸ், சக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story