நீலகிரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நீலகிரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊட்டி
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நீலகிரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊட்டி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் மணிக்கூண்டு பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர தலைவர் கெம்பையா தலைமை தாங்கினார்.
இதில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது மக்களுக்கு கடும் சுமையை ஏற்படுத்தி உள்ளது. எனவே அதனை திரும்ப பெற வேண்டும் என்று கையில் பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் ஊட்டி சேரிங்கிராஸ் பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு கணேஷ் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கண்டன கோஷங்கள்
கோத்தகிரி டானிங்டன் சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையொட்டி கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண்குமார், சண்முகவேல் ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
குன்னூர் நகர, வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் ஊட்டி சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குந்தா வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் மஞ்சூர் பெட்ரோல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோன்று கூடலூரிலும் பெட்ரோல் நிலையம் முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story