கெலமங்கலத்தில் கத்தியை காட்டி மிரட்டி 9 பவுன் நகை கொள்ளை-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கெலமங்கலத்தில் கத்தியை காட்டி மிரட்டி 9 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ராயக்கோட்டை:
கத்தியை காட்டி
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் செந்தில்நகரை சேர்ந்தவர் முருகன் என்கிற அருள்வாணன் (வயது 48). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள் 3 வாலிபர்கள் புகுந்தனர். அவர்கள் திடீரென முருகனை கத்தியை காட்டி மிரட்டினர்.
பின்னர் அவர் அணிந்திருந்த செயின், மோதிரம் உள்பட 9 பவுன் நகையை பறித்தனர். மேலும் வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் செல்போனை கொள்ளை அடித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து முருகன் கெலமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
வலைவீச்சு
புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கெலமங்கலத்தில் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி 9 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story