கிருஷ்ணகிரியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு-கலெக்டர் தலைமையில் நடந்தது


கிருஷ்ணகிரியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு-கலெக்டர் தலைமையில் நடந்தது
x

கிருஷ்ணகிரியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கி உறுதிமொழியை வாசிக்க, கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அனைவரும் திரும்ப படித்து ஏற்றுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து கலெக்டர், தேசிய குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகன், தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்ட இயக்குனர் பிரியா, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் சரவணன், தாட்கோ பொது மேலாளர் யுவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story