திருவண்ணாமலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்


திருவண்ணாமலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2021 10:57 PM IST (Updated: 11 Jun 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் வெற்றிசெல்வன் முன்னிலை வகித்தார். 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

Next Story