தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு


தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு
x
தினத்தந்தி 11 Jun 2021 11:00 PM IST (Updated: 11 Jun 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை உத்தரவின்படி 1,532 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை உத்தரவின்படி 1,532 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தரவு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அடைக்கப் பட்டுள்ள நிலையில் வருகிற 14-ந் தேதி முதல் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பள்ளிக்கு வர கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1532 பள்ளிகளில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணியா ளர்கள் பள்ளிக்கு வர முதன்மை கல்வி அலுவலகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பள்ளிக்கு வந்து பள்ளி வளாகம், வகுப்பறைகளை தூய்மை பணிகளை முதல் பணியாக மேற்கொண்டு சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. கடந்த பல மாதங்களாக பள்ளி வளாகம் திறக்கப்படாததால் முதல்கட்டமாக தூய்மை பணியை முழுமையாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 
மேலும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ், விலையில்லா பாடபுத்தகங்கள், சீருடைகள், கற்றல் கற்பித்தலுக்கான இதர நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளதால் அதுதொடர்பான பணிகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டு உள்ளது.
கல்வி தொலைக்காட்சி
கொரோனா தொற்று காரணமாக பிளஸ்-2 தேர்வுகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பிளஸ்-2 வகுப்பு மாணவர் களுக்கு உயர்கல்வி பயில்வதற்கான மதிப்பெண்கள் எவ்வாறு வழங்குவது, அதற்கான சான்றிதழ்கள் எவ்வாறு வழங்குவது என்று அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்கும் என்றும் அதன்படி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் அதுதொடர்பான பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
இதுதவிர, பள்ளிகள் திறக்கும் வரை கல்வித்தொலைக்காட்சி வாயிலாக மாணவ-மாணவிகளை கற்றல் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்வையிட செய்வதை முறைப்படுத்துவது தொடர்பாகவும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Next Story