கண்களில் கருப்பு துணிகட்டி போராட்டம்


கண்களில் கருப்பு துணிகட்டி போராட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2021 11:13 PM IST (Updated: 11 Jun 2021 11:13 PM IST)
t-max-icont-min-icon

கண்களில் கருப்பு துணிகட்டி போராட்டம் நடந்தது.

சாயல்குடி, 
சாயல்குடியில் காங்கிரஸ் கட்சியினர் கண்களில் கருப்பு துணியை கட்டி பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை தோரணம் கட்டி பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சாயல்குடியில் காங்கிரஸ் நகர் தலைவர் காமராஜ் தலைமை தாங்கி னார். மாவட்ட துணை சேர்மன் வேல்சாமி, காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் சத்தார், மாவட்ட செயலாளர்கள் போஸ், முனிய சாமி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் முனியசாமி, நரிப்பையூர் தலைவர் ஞானசேகரன், மாவட்ட துணை தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் விக்னேசு வரன், முன்னாள் நகர் தலைவர் ஜெயராஜ், நரிப்பையூர் ஊராட்சி துணைத்தலைவர் சண்முகராஜா, சாயல்குடி நகர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜா, கடலாடி மேற்கு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் மிக்கேல் சிங்கம் , முன்னாள் நகர் தலைவர் ஹமீது, இளைஞர் காங்கிரஸ் நகர் செயலாளர் மைக்கேல் ராஜ், கொக்காடி கிளை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, இளைஞர் காங்கிரஸ் சகாயராஜ், அமிர்தராஜ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். கடலாடி கிழக்கு ஒன்றிய காங்கிரஸ் சார்பில் சிக்கல் கிராமத்தில் கடலாடி வட்டார காங்கிரஸ் தலைவர் கிழக்கு தனசேகரன் தலைமை வகித்தார். சிக்கல் ஊராட்சி துணைத்தலைவர் நூருல்அமீன், முன்னாள் சிறைக் குளம்ஊராட்சி தலைவர் ஆர்தர், மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் விக்னேசுவரன், கடலாடி வட்டார துணைத்தலைவர் சங்கீதா முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் நல்ல முகமது கனி, முனியசாமி, தொட்டியபட்டி யூசுப், கருப்பையா, கிராம கமிட்டி நிர்வாகிகள் நீலமேகம், முனியசாமி, கருப்பசாமி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Next Story