ஒரு நாள் ஊதியத்தை வழங்கிய ஆசிரியர்கள்
ஒரு நாள் ஊதியத்தை வழங்கிய ஆசிரியர்கள்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக தன்னார்வலர்கள் உள்பட பலர் தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகின்றனர். அதன்படி கூடலூர் கல்வி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 500-க்கான காசோலையை மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதிக்கு நேற்று ஊட்டி கலெக்டர்
அலுவலகத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் வழங்கினர். பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத் தொகையை கொரோனா நிவாரண பணிகளுக்காக வழங்கினர். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசரூதின் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story