கோவை மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 31 பேர் பலி
கோவை மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 31 பேர் பலியானார்கள்.
கோவை
கோவையில் கடந்த மாதம் தினசரி கொரோனா பாதிப்பு 4,500 வரை சென்றது. ஆனால் தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலையில் சுகாதார துறை வெளியிட்ட பட்டியல்படி கோவையில் நேற்று ஒரே நாளில் 2,056 பேருக்கு தொற்று உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 99 ஆயிரத்து 660 ஆக உயர்ந்து உள்ளது.
கோவை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 4,612 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 79 ஆயிரத்து 371 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 18,600 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், அதனால் ஏற்படும் மரணங்கள் குறையாமல் உள்ளது.
நேற்று முன்தினம் 20 பேர் தொற்றுக்கு இறந்தனர். ஆனால் நேற்று கொரோனாவுக்கு 31 பேர் இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 1,689 பேர் இறந்து உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 301 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று 419 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
மேலும் 585 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்து 721 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 20 ஆயிரத்து 789 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
கொரோனாவால் 128 பேர் இறந்தனர். மீதமுள்ள 3 ஆயிரத்து 804 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீலகிரியில் மொத்தமுள்ள 352 ஆக்சிஜன் படுக்கைகளில் 282 படுக்கைகள் நிரம்பி உள்ளது. மீதமுள்ள 70 படுக்கைகள் காலியாக இருக்கிறது.
Related Tags :
Next Story