117 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி


117 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி
x
தினத்தந்தி 11 Jun 2021 11:34 PM IST (Updated: 11 Jun 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதித்த 2 பேர் பலியானார்கள்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 1421 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.நேற்று ஒரே நாளில் 215 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
மேலும் கொரோனா நோய் தொற்று காரணமாக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 70 வயதான மூதாட்டி ஒருவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், 84 வயதான முதியவர் ஒருவர் காரைக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையிலும் சிகி்ச்சை பலனின்றி இறந்தனர்.


Next Story