தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை


தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 11 Jun 2021 11:49 PM IST (Updated: 11 Jun 2021 11:49 PM IST)
t-max-icont-min-icon

குன்றக்குடியில் ேநாய் கொடுமையால் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காரைக்குடி,

குன்றக்குடி போலீஸ் சரகம் ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 86). கடந்த சில மாதங்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லை. இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நோய் கொடுமையால் விரக்தியடைந்தார். அதனால் சம்பவத்தன்று அதிகாலையில் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டிற்குச் சென்று அங்குள்ள மரத்தில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story