சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் இந்த ஆண்டு இறுதிக்குள் ரோப்கார் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். அமைச்சர் சேகர்பாபு தகவல்


சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் இந்த ஆண்டு இறுதிக்குள் ரோப்கார்  பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். அமைச்சர் சேகர்பாபு தகவல்
x
தினத்தந்தி 11 Jun 2021 11:56 PM IST (Updated: 11 Jun 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் இந்த ஆண்டு இறுதிக்குள் ரோப்கார் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சோளிங்கர்

அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் மற்றும் யோக நரசிம்மர் சுவாமி பெரிய மலை ஸ்ரீயோக ஆஞ்சநேயர் சாமி மலைக்கோவிலில் இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது யோக லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் பெரியமலை அடிவாரத்தில் ரூ.10 கோடி மதிப்பில் கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரோப்கார் திட்டப் பணிகளை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். 
பின்னர் அவர் கூறியதாவது:-

ஆக்கிரமிப்பு அகற்றப்படும்

தமிழகம் முழுவதும் பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாத பெரிய, சிறிய கோவில்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவகிறது. பணிகள் நிறைவு பெற்றவுடன் கும்பாபிஷேகத்திற்கான தேதியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் 

இந்துசமய அறநிலையத் துறைக்கு என குறைகளை பதிவிடுங்கள் என்ற செயலி ஆணையாளர் குமரகுரு தலைமையில் தொடங்கப்பட்டுள்ளது. அதில் 15 நாட்களில் 1,500 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவில் நிலங்களை யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் எந்தவிதமான அரசியல் பாகுபாடும் இன்றி ஆக்கிரமிப்பு அகற்றப்படும்.

இந்த ஆண்டு இறுதிக்குள்...

சோளிங்கர் கோவிலில் 12 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரோப்கார் திட்டப்பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு பெற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முதல்-அமைச்சர் திறந்து வைப்பார். மிகவும் பழமை வாய்ந்த கோவில்களை தொல்லியல் துறை மற்றும் இந்து அறநிலையத்துறை இணைந்து புனரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story