நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 7 பேர் பலி


நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 7 பேர் பலி
x
தினத்தந்தி 11 Jun 2021 11:57 PM IST (Updated: 11 Jun 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 7 பேர் பலி

நாமக்கல்:
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 337 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர். அதில் 2 பேரின் பெயர்கள் சேலம் மற்றும் சென்னை பட்டியலுக்கு மாற்றப்பட்டன. அதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 335 ஆக ஆனது. இந்தநிலையில் நேற்று மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நாமக்கல்லை சேர்ந்த 95 வயது மூதாட்டி, ராசிபுரத்தை சேர்ந்த 75 வயது மூதாட்டி, கொக்கராயன்பேட்டையை சேர்ந்த 65 வயது மூதாட்டி, நவலடிப்பட்டியை சேர்ந்த 84 வயது முதியவர் என மொத்தம் 7 பேர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 342 ஆக உயர்ந்தது.

Next Story