காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்


காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2021 11:58 PM IST (Updated: 11 Jun 2021 11:58 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காரைக்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.

காரைக்குடி,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காரைக்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.

காரைக்குடி

காரைக்குடி ராஜீவ் காந்தி சிலை அருகே உள்ள பெட்ரோல் பங்க் முன்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தலைமை தாங்கினார்.. காரைக்குடி சட்டமன்ற தொகுதி மாங்குடி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் நகர காங்கிரஸ் தலைவர் பாண்டி மெய்யப்பன், ஐ.என்.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் கே.கே.களஞ்சியம், மாவட்ட செயலாளர்கள் அப்பாவு ராமசாமி, ஆண்டவர் பழனியப்பன், ராஜீவ்காந்தி கைத்தறி நெசவாளர் சங்க தலைவர் பழனியப்பன், நகர செயலாளர் குமரேசன், பெரியகோட்டை ஊராட்சி கவுன்சிலர் செந்தில் உள்பட  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக காரைக்குடி வடக்கு போலீசில் கிராம நிர்வாக அலுவலர் அபிநயா புகார் செய்தார். அதன் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், மாங்குடி எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காளையார்கோவில்

காளையார்கோவிலில் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத்தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆரோக்கியசாமி, குழந்தைதாஸ், ஊராட்சி மன்ற தலைவர் ஜவஹர் ராயன், போஸ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கலைவாணி ராமநாதன், ஜேம்ஸ் சூசை, ஆரோக்கியம், கொங்கையா, ஆறுமுகம் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தேவகோட்டை

தேவகோட்டையில் நகர காங்கிரஸ் (கிழக்கு) தலைவர் வக்கீல் சஞ்சய் தலைமையில், சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் துணைத்தலைவர் அப்பச்சி சபாபதி முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடபெற்றது. இதில் தெற்கு வட்டார நிர்வாகி வென்னியூர் புகழேந்தி, நகர நிர்வாகிகள் பவுல் ஆரோக்கியம், பேச்சாளர் நஜீமுதின், சிவகுமார், செந்தில், சங்கர், கார்த்தி, ராமச்சந்திரன், பாண்டித்துரை, சுப்பையா, வல்லரசு, ஆகியோர் கலந்து கொண்டார்கள். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story