இளையான்குடி,
இளையான்குடியில் ராஜேந்திர சோழீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான ஊருணியில் தற்போது தண்ணீர் நிரம்பி உள்ளது. ஊரின் மையப்பகுதியில் ஊருணி இருப்பதால் சாக்கடை கழிவுகளும் அதில் கலக்கின்றன. இந்த நிலையில் ஊருணியில் மீன்கள் செத்து மிதந்தன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் ஊருணியில் செத்து மிதந்த மீன்களை பார்த்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, கோவிலுக்கு சொந்த ஊருணியில் கழிவுநீர் கலப்பதால் தான் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மீன்கள் செத்ததற்கு காரணம். எனவே பேரூராட்சி அதிகாரிகள் கோவில் ஊருணியில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தி, கழிவுநீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.