போத்தனூர் பொள்ளாச்சி ரெயில் பாதை மின்மயமாக்கல் அதிகாரிகள் நேரில் ஆய்வு
போத்தனூர்-பொள்ளாச்சி ரெயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
கிணத்துக்கடவு
போத்தனூர்-பொள்ளாச்சி ரெயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
மின் மயமாக மாற்றம்
திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக போத்தனூர் மற்றும் பாலக்காடு இடையேயான மீட்டர் கேஜ் ரெயில் பாதை அகலரெயில் பாதையாக மாற்றப்பட்டது.
இதற்கிடையில் போத்தனூர்-பொள்ளாச்சி ரெயில்பாதையை மின் மயமாக்க ரூ.37 கோடியே 36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்து போத்தனூர் வரை மின் கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்றது.
இந்த பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில், மின் கம்பத்தில் மின்கம்பிகள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு
இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், மின்கம்பத்தில் கம்பிகள் சரியாக இணைக்கப்பட்டு உள்ளதா? அவற்றில் ஏதாவது பாதிப்புகள் உள்ளதா என்பது குறித்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் உடனடியாக அவற்றை சரிசெய்தனர். இதற்காக நவீன எந்திரம் கொண்டு வரப்பட்டு அந்த எந்திரம் மூலம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
சோதனை ஓட்டம்
போத்தனூர்-பொள்ளாச்சி ரெயில் பாதையை மின் மயமாக்கல் பணி நடைபெற்றது. இற்காக மின் கம்பங்கள் அமைத்து மின்கம்பிகள் பொருத்தும் பணியும் முடிந்து விட்டது.
தற்போது அதில் ஏதாவது குறைபாடுகள் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த பணி முடிந்ததும், ரெயில்வே உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து சோதனை ஓட்டம் நடத்த அனுமதி வழங்குவார்கள்.
அதன் பின்னர் பாதுகாப்பு அதிகாரிகள் வந்து ஆய்வு செய்வார்கள். அதன் பிறகு போத்தனூர்-பொள்ளாச்சி பாதையில் ரெயில் இயக்குவது குறித்த அறிவிப்பு வெளியானதும் ரெயில் இயக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story