ரூ 30 லட்சத்தில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் கட்டும் பணி


ரூ 30 லட்சத்தில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் கட்டும் பணி
x
தினத்தந்தி 12 Jun 2021 12:55 AM IST (Updated: 12 Jun 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை ரொட்டிக்கடை பகுதியில் ரூ.30 லட்சத்தில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது.

வால்பாறை

வால்பாறை ரொட்டிக்கடை பகுதியில் ரூ.30 லட்சத்தில் நெடுஞ்சாலைத்துறை  அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது.

நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் 

மலைப்பிரதேசமான வால்பாறையில் அடிக்கடி மழை பெய்யும் என்பதால் மண்சரிவு ஏற்படுவதுடன், சாலைகளில் மரங்களும் முறிந்து விழும். ஆனால் வால்பாறை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் இல்லாமல் இருந்தது. 

அந்த அலுவலகம் அட்டக்கட்டி, ஆனைமலை பகுதியில் செயல்பட்டு வந்ததால், பொதுமக்கள் அங்கு செல்லக்கூடிய நிலைதான் இருந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். 

எனவே வால்பாறை யிலேயே நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

கட்டும் பணி தீவிரம் 

அதன்படி வால்பாறையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக இங்குள்ள ரொட்டிக்கடை பகுதியில் ரூ.30 லட்சத்தில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, வால்பாறையிலேயே நெடுஞ் சாலைத்துறை அலுவலகம் கட்டப்படுவதால், சாலை வசதிக்காக நாங்கள் ஆனைமலை செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

 இங்கேயே அதிகாரிகளை சந்தித்து தீர்வு காணலாம் என்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, வால்பாறையில் நவீன வசதிகளுடன் கூடிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் முடிந்த பின்னர் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்றனர்.


Next Story