பெருஞ்சித்திரனார் நினைவுதினம் கடைப்பிடிப்பு
பாளையங்கோட்டை அருகே பெருஞ்சித்தரனார் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே சிவந்திப்பட்டியில், வளர்மதி மன்றம் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தமிழறிஞர் "பாவலரேறு" பெருஞ்சித்திரனாரின் 26-வது நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. தமிழக மக்கள் முன்னேற்ற கழக நெல்லை மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முத்துப்பாண்டி தலைமை தாங்கினார். செயலாளர் துரைப்பாண்டியன், வளர்மதி மன்ற தலைவர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் கண்மணி மாவீரன், பெருஞ்சித்திரனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழர் விடுதலை கொற்றம் தலைவர் வியனரசு பங்கேற்று பெருஞ்சித்திரனார் பற்றி பேசினார். நிகழ்ச்சியில் தமிழர் தேசிய முன்னணி நெல்லை மாவட்ட தலைவர் வக்கீல் இளஞ்செழியன், த.ம.மு.க. மகளிரணி சர்மிளா கண்மணி, ஒன்றிய இணை செயலாளர் பரமசிவபாண்டியன், மாணவர் அணி இணை செயலாளர் முத்துகுமார், விவசாய அணி சுப்பையா, வீரபாண்டி, முத்துகுமார், சதீஷ் மற்றும் சிவந்திப்பட்டி கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story