ரூ.2 ஆயிரம், 14 மளிகை பொருட்களுக்கு டோக்கன் வினியோகம்; ரேஷன் கடைகளில் 15-ந் தேதி முதல் வழங்கப்படுகிறது


ரூ.2 ஆயிரம், 14 மளிகை பொருட்களுக்கு டோக்கன் வினியோகம்; ரேஷன் கடைகளில் 15-ந் தேதி முதல் வழங்கப்படுகிறது
x
தினத்தந்தி 11 Jun 2021 7:50 PM GMT (Updated: 11 Jun 2021 7:50 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம், 14 மளிகை பொருட்கள் பெறுவதற்கு டோக்கன் வினியோகம் நேற்று தொடங்கியது.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம், 14 மளிகை பொருட்கள் பெறுவதற்கான டோக்கன் வினியோகம் நேற்று தொடங்கியது.

கொரோனா நிவாரணம்

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நிவாரணமாக அரிசி வாங்கும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்குவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதில் முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் கடந்த மாதம் வழங்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் 2-வது கட்டமாக ரூ.2 ஆயிரம் வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் வழங்கப்படுகிறது. மேலும் இதனுடன் சேர்த்து 14 வகையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது.

டோக்கன் வினியோகம்

ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண உதவி மற்றும் மளிகை பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் டோக்கன் வழங்கப்படுகிறது.
இந்த பணி நேற்று தொடங்கியது. நெல்லையில் ரேஷன் கடைகளில் மற்றும் வீடு வீடாக சென்று ஊழியர்கள் டோக்கன்களை வழங்கினார்கள். ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் வந்து பெற்றுக்கொள்ளும் வகையில் டோக்கன் வழங்கப்பட்டது.

டோக்கன் பெற்றவர்களுக்கு வருகிற 15-ந்தேதி முதல் பணம், பொருட்கள் வழங்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 788 ரேஷன் கடைகள் உள்ளன. அதன் மூலம் 4.10 லட்சம் குடும்பங்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியில் ரேஷன் கடைகளுக்கு வந்து, சமூக இடைவெளியுடன், வரிசையில் நின்று நிவாரண நிதி, பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story