குப்பை தொட்டியில் திடீர் தீ


குப்பை தொட்டியில் திடீர் தீ
x
தினத்தந்தி 12 Jun 2021 1:23 AM IST (Updated: 12 Jun 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மேலப்பாளையத்தில் குப்பை தொட்டியில் திடீரென தீப்பிடித்தது.

நெல்லை:
மேலப்பாளையம் அம்பை சாலையில் வி.எஸ்.டி பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் நேற்று இரவு திடீர் என தீப்பற்றி எரிந்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அந்தப்பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.

Next Story