ஜவுளி கடைக்கு ‘சீல்’


ஜவுளி கடைக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 12 Jun 2021 1:30 AM IST (Updated: 12 Jun 2021 1:30 AM IST)
t-max-icont-min-icon

திருச்சுழியில் ஊரடங்கு விதிகளை மீறிய ஜவுளி கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

காரியாபட்டி,
தற்பொழுது ஊரடங்கு காரணமாக ஜவுளிக்கடைகள் இயங்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்தநிலையில் திருச்சுழி மெயின் பஜாரில் ஒரு ஜவுளி கடை இயங்கி  வருவதாக தாசில்தார் முத்துகிருஷ்ணனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து நேற்று தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையிலான வருவாய்த்துறையினர் ஜவுளி கடையை பூட்டி  ‘சீல்’  வைத்தனர். 

Next Story