தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்


தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Jun 2021 1:53 AM IST (Updated: 12 Jun 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 14 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன

குளித்தலை
குளித்தலை அருகே உள்ள வளையப்பட்டி பகுதியில் உள்ள ஒருவரது முருங்கை தோட்டத்தில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு போலீசார் சென்றபோது சிலர் தப்பி ஓடி விட்டனர். பின்னர், அங்கு தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 14 வெளி மாநில மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.


Next Story