ஆட்டோ டிரைவர்களுக்கு நிவாரண தொகை வழங்க கோரி கலெக்டரிடம் மனு
ஆட்டோ டிரைவர்களுக்கு நிவாரண தொகை வழங்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையாவிடம் மாவட்ட இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் வினோத் கண்ணா தலைமையில் ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை மனு ஒன்றை நேற்று அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது.
கொரோனா ஊரடங்கு காரணமாக ஆட்டோ தொழிலாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பொது முடக்கம் அமலில் உள்ள வரை ஆட்டோ டிரைவர்களுக்கு இழப்பீடாக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், வாகனங்களின் இன்சூரன்ஸ், வரி, பர்மிட், எப்.சி கட்டணம் ஆகியவற்றை தமிழக அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும், நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள், பதிவு செய்யாதவர்கள் என அனைத்து ஆட்டோ டிரைவர்களுக்கும் அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story