ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட சூப்பர் மார்க்கெட்டை வியாபாரிகள் முற்றுகை


ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட சூப்பர் மார்க்கெட்டை வியாபாரிகள் முற்றுகை
x
தினத்தந்தி 12 Jun 2021 9:20 AM IST (Updated: 12 Jun 2021 9:20 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட சூப்பர் மார்க்கெட்டை வியாபாரிகள் முற்றுகை மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

பூந்தமல்லி, 

கொரோனா காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் விருகம்பாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட், ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை மீறி ரகசியமாக செயல்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி வியாபாரிகள், சூப்பர் மார்க்கெட்டை முற்றுகையிட்டு, அங்கு பணிபுரியும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விருகம்பாக்கம் போலீசார், வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரிகள், விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்த ஊழியர்களை வெளியேற்றி விட்டு சூப்பர் மார்கெட் கடைக்கு ‘சீல்’ வைத்தனர்.

Next Story