தெற்கு ரெயில்வே மூலம் இதுவரை 5 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்


தெற்கு ரெயில்வே மூலம் இதுவரை 5 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்
x
தினத்தந்தி 12 Jun 2021 10:22 AM IST (Updated: 12 Jun 2021 10:22 AM IST)
t-max-icont-min-icon

தெற்கு ரெயில்வேயின் உதவியால், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் தேவை அதிகரிக்க தொடங்கி நிலையில், தெற்கு ரெயில்வேயின் உதவியால், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த மாதம் 14-ந் தேதி, தமிழகத்துக்கு முதல் ஆக்சிஜன் ரெயில் வந்தது. தொடர்ந்து மேற்கு வங்காளம், ஒடிசா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் நிரப்பப்பட்ட ரெயில்கள் தண்டையார்பேட்டை, மதுக்கரை, மீளவிட்டான் போன்ற இடங்களுக்கு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று 62-வது ஆக்சிஜன் ரெயில் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து கோவைக்கு 4 டேங்கர்கள் மூலம் 86.22 டன் ஆக்சிஜனை கொண்டு வந்தது. இதுவரை தமிழகத்துக்கு தெற்கு ரெயில்வே மூலம் 4,500 டன் ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கேரள மாநிலத்துக்கு 513.72 டன் ஆக்சிஜன் வினியோகிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தெற்கு ரெயில்வே மூலம் இதுவரை 5 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகிக்கப்பட்டுள்ளது.

Next Story