நலத்திட்ட உதவி
ஆதிதிராவிடர் கூட்டமைப்பு சார்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
பரமக்குடி,
பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட எமனேசுவரம் கிறிஸ்தவ தெரு பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் கூட்டமைப்பு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கூட்டமைப்பின் மாநில செயல் தலைவர் குணவேந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கார்த்திக், மாநில பொதுச்செயலாளர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்தி தொடர்பாளர் அறிவழகன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., பரமக்குடி முருகேசன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசை வீரன், முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ், டாக்டர் ஆஷிக் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி நகர் தி.மு.க. பொறுப்பாளர்கள் சேது கருணாநிதி, ஜீவரெத்தினம், நகர் இளைஞர் அணி அமைப் பாளர் சண்.சம்பத்குமார், போகலூர் ஒன்றிய தி.மு.க. பொறுப் பாளர் வக்கீல் கதிரவன், நகர் பொறுப்புக் குழு உறுப்பினர் பைசல் ரசீது, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் கருப் பையா, செல்வி, ஆதிதிராவிடர் கூட்டமைப்பின் வட்ட தலைவர் தோமாஸ், பொருளாளர் மரியசூசை, நகர கூட்டுறவு வங்கியில் ஓய்வுபெற்ற பொதுமேலாளர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டமைப்பின் நகர் அமைப் பாளர் கஜேந்திரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story