மதுபானம் கடத்தி வந்த 2 பேர் கைது


மதுபானம் கடத்தி வந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 Jun 2021 8:13 PM IST (Updated: 12 Jun 2021 8:13 PM IST)
t-max-icont-min-icon

மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மதுபானம் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை 6 மணிக்கு மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. இதையடுத்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜெயபால் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சையது உலாம் தஸ்தாகிர், தனிப்பிரிவு ஏட்டு ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் ரெயில் பெட்டிகளில் சோதனையிட்டனர். 

அப்போது எஸ்-1 பெட்டியில் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 பைகளை போலீசார் கண்டுபிடித்தனர். 
பின்னர் அவற்றை சோதனையிட்ட போது 192 மதுபான பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

 இதையடுத்து அந்த பெட்டியில் பயணம் செய்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர்கள் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த வில்சன்ஞானராஜன் (வயது 30), தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்கற்குளத்தை சேர்ந்த கணேசன் (38) என்பதும், மைசூரில் இருந்து மதுபான பாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Next Story