பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தஞ்சையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தஞ்சையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2021 8:38 PM IST (Updated: 12 Jun 2021 8:38 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்துக்கு காரணமான பெட்ரோலிய எரிபொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து திரும்பப்பெற வேண்டும்.

பெட்ரோலிய பொருட்கள் மீதான அதிகப்படியான வரிவிதிப்புகளை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல் டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தஞ்சையில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் தலைமை தாங்கினார். தஞ்சை வட்டார காங்கிரஸ் தலைவர் ரவிச்சந்திரன், மாநகர் மாவட்ட துணை தலைவர் செந்தில் பழனிவேல், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரபு மண்கொண்டார், சோழ மண்டல சிவாஜி பாசறை தலைவர் சதா வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நிர்வாகிகள் அய்யாறு, மார்க்கெட் செல்வராஜ், தர்மராஜ், லெனின், இளையராஜன், விவேக், சசிகலா, இளைய பாரத் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப்பெறக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தஞ்சை மேரீஸ்கார்னர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் ராஜாத்தம்பி முன்னிலை வகித்தார்.

விவசாய பிரிவு தலைவர் ஜேம்ஸ், செயலாளர் மணிவண்ணன், மனித உரிமை துறை மாவட்ட தலைவர் அலாவூதீன், பொறியாளர் அணி தலைவர் நாராயணன், எஸ்.சி.எஸ்.டி பிரிவு பொதுசெயலாளர் அருண்சுபாஷ், மகளிர் விவசாய பிரிவு கலைச்செல்வி, தகவல் அறியும் சட்ட தலைவர் செல்வம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் யூனஸ், தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Next Story