கல்லாபுரம் பகுதியில் மழை மற்றும் காற்றால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

கல்லாபுரம் பகுதியில் மழை மற்றும் காற்றால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
x
தினத்தந்தி 12 Jun 2021 10:01 PM IST (Updated: 12 Jun 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

கல்லாபுரம் பகுதியில் மழை மற்றும் காற்றால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

போடிப்பட்டி:
கல்லாபுரம் பகுதியில் மழை மற்றும் காற்றால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
பலத்த காற்று
உடுமலையையடுத்த கல்லாபுரம், அமராவதி, எலையமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அமராவதி அணையை நீராதாரமாகக் கொண்டு நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் நடப்பு பருவத்தில் சுமார் 1000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான நெல் வயல்கள் தற்போது அறுவடைப் பருவத்தில் உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் பெய்த மழை மற்றும் தொடர்ந்து வீசும் பலத்த காற்றால் ஒரு சில வயல்களில் நெற் கதிர்கள் சாய்ந்துள்ளது. 
எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அந்த பகுதிகளில் வேளாண்மை துணை இயக்குனர் வடிவேல், உதவி வேளாண்மை அலுவலர் அமல்ராஜ் மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
ஆட்கள் மூலம் அறுவடை
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
மழை மற்றும் காற்றினால் கதிர் முற்றிய நெற்பயிர்கள் சாய்ந்துள்ளது. அதேநேரத்தில் வயலில் அதிக அளவில் நீர் தேங்காததால் நெல் மணிகள் முளைத்து வீணாவது உள்ளிட்ட சேதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. மேலும் நெற்கதிர்கள் அதிகமாக சாய்ந்துள்ள பகுதிகளில் எந்திரங்கள் மூலம் அறுவடை செய்வதில் சிரமங்கள் ஏற்படும். 
அதுபோன்ற இடங்களில் ஆட்கள் மூலம் அறுவடை செய்ய வேண்டிய நிலை உள்ளது. பொதுவாக ஒரு பகுதியில் 33 சதவீதத்துக்கு மேல் பாதிப்பு ஏற்படும் போது தான் அரசு நிவாரணம் வழங்கப்படுகிறது. எனவே தற்போதைய ஆய்வில் உள்ள நிலை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story