காரைக்குடி,
சாக்கோட்டை போலீசார் மித்திராவயல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே டிராக்டரில் ஆற்று மணலை 2 பேர் கடத்தி செல்வது தெரியவந்தது. உடனடியாக அவர்களை வழிமறித்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் அவர்கள் பாப்பாகுடியைச் சேர்ந்த வின்சென்ட் (வயது 38), பாஸ்கர் (36) என்றும் அவர்கள் தேனாற்று பகுதியிலிருந்து 2 யூனிட் அளவில் மணலை கடத்தி வருவது தெரிய வந்தது. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். ஆற்று மணலுடன் டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.