திருப்பூரில் தடுப்பூசி போடுவதற்காக பொதுமக்கள் குவிந்தனர். தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பலர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
திருப்பூரில் தடுப்பூசி போடுவதற்காக பொதுமக்கள் குவிந்தனர். தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பலர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
திருப்பூர்
திருப்பூரில் தடுப்பூசி போடுவதற்காக பொதுமக்கள் குவிந்தனர். தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பலர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
5 நாட்களாக தடுப்பூசி இல்லை
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக தடுப்பூசி போட வருகிறவர்களுக்கு எளிதாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இதன் பின்னர் கொரோனா பாதிப்பு திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அதிகரித்தது.
இதனால் தடுப்பூசி போட பொதுமக்கள் பலரும் முண்டியடித்தபடி அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் குவிந்தனர். இதன் காரணமாக தடுப்பூசி தட்டுப்பாடும் மாவட்டத்தில் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக தடுப்பூசி இருப்பு இல்லாமல் இருந்தது.
ஏமாற்றம்
இந்த நிலையில் சென்னையில் இருந்து தடுப்பூசி திருப்பூர் மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. 2 ஆயிரத்து 500 டோஸ் தடுப்பூசிகள் மாவட்டம் முழுவதும் பிரித்து அனுப்பப்பட்டன. இதனைத்தொடர்ந்து நேற்று காலை மாநகரில் திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், சூசையாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், வேலம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி போடப்பட்டது. இதற்கிடையே தடுப்பூசி போடப்படும் தகவல் கிடைத்தும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முன்பு ஏராளமானவர்கள் குவிந்தனர்.
இதன் காரணமாக அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. பல இடங்களில் முறைகேடுகளை தவிர்க்கும் வகையில் போலீசார் டோக்கன் வினியோகம் செய்தனர். இந்தநிலையில் விறு, விறுவென தடுப்பூசி செலுத்தப்பட்டு, தீர்ந்தன. இதனால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பலரும் தடுப்பூசி முடிந்ததாலும், தட்டுப்பாட்டின் காரணமாகவும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story