மாவட்ட செய்திகள்

திருப்பூரில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் இயங்கிய பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். + "||" + paniyan seal

திருப்பூரில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் இயங்கிய பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

திருப்பூரில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் இயங்கிய பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
திருப்பூரில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் இயங்கிய பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
திருப்பூர்
திருப்பூரில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் இயங்கிய பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
திருப்பூர் மாநகர பகுதியில் ஊரடங்கு அமலில் உள்ள போதும் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் 10 சதவீத ஊழியர்களுடன் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும் விதிமீறல் உள்ள நிறுவனங்களை கண்காணிக்க வருவாய்த்துறை, காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று திருப்பூர் ஆர்.டி.ஓ. ஜெகநாதன், வடக்கு தாசில்தார் ஜெகநாதன், மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் கொண்ட குழுவினர் நெருப்பெரிச்சல், பாண்டியன் நகர் பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.
பின்னலாடை ஏற்றுமதிநிறுவனத்திற்கு ‘சீல்’
அப்போது சவுடாம்பிகை நகரில் செயல்பட்டு வந்த ஜி.டி.என். பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இயங்கி வந்தது தெரியவந்தது. அந்த நிறுவனத்தில் மொத்தம் 500 ஊழியர்களில் 200 பேர் நேற்று பணியாற்றினார்கள். இதனால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் இயங்கிய அந்த நிறுவனத்தை ஆர்.டி.ஓ. தலைமையிலான குழுவினர் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
இதுபோல் மேலும் 2 பனியன் நிறுவனங்கள் மற்றும் ஒரு மளிகை கடைக்கு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காத காரணத்தால் மொத்தம் ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.