பெண்ணுக்கு கொலை மிரட்டல்


பெண்ணுக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 12 Jun 2021 10:27 PM IST (Updated: 12 Jun 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணுக்கு கொலை மிரட்டல்

ஆவூர், ஜூன்.13-
குளத்தூர் தாலுகா, மண்டையூரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி தனலட்சுமி (வயது 50). இவரது வீட்டின் முன்பு நேற்று முன்தினம் மாலை அதே ஊரை சேர்ந்த சிவா, பாலா ஆகிய 2 பேரும் நின்றுகொண்டு தனலட்சுமியை ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசி தகராறு செய்தனர். மேலும் அவர்கள் 2 பேரும் தனலட்சுமியிடம் தங்களைப் பற்றி  போலீசிடம் ஏதாவது சொன்னால் உன்னையும், உனது கணவரையும் சும்மா விட மாட்டோம் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தனலட்சுமி மண்டையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில்  சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் விசாரணை நடத்தி சிவா, பாலா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Next Story