தமிழக-கேரள எல்லையில் உள்ள கிராமங்களின் சாலைகள் மூடல்
தமிழக-கேரள எல்லையில் உள்ள கிராமங்களின் சாலைகள் மூடப்பட்டன.
பந்தலூர்,
கேரள மாநிலம் சுல்தான்பத்தேரியில் இருந்து நம்பியார்குன்னு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள சாலைகள் வழியாக பந்தலூர் தாலுகாவிற்குள் பலரும் வந்து செல்கின்றனர். மேலும் அவர்கள் இ-பாஸ் பெறுவது இல்லை. இது தவிர சோதனைச்சாவடி வழியாக வராததால், போலீசார் கண்ணிலும் படுவது இல்லை. இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தேவாலா போலீஸ் சூப்பிரண்டு அமீர் அகமது தலைமையிலான போலீசார் அந்த கிராமங்களில் உள்ள சாலைகளில் ஆய்வு நடத்தினர். அப்போது கேரள பதிவு எண் கொண்ட வாகனங்கள் வந்து செல்வது உறுதியானது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி அந்த சாலைகளை தகரம் வைத்து மூடினர். மேலும் அத்துமீறி நுழைந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story