சாராய வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


சாராய வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 12 Jun 2021 10:31 PM IST (Updated: 12 Jun 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

சாராய வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

வடகாடு, ஜூன்.13-
வடகாடு அருகே உள்ள கருக்காகுறிச்சி தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 41). கடந்த மாதம் 21-ந்தேதி கருக்காகுறிச்சி கிழக்கு சொக்கன்தெரு தைலமரக்காட்டில் சாராயம் காய்ச்சி விற்றதாக கண்ணனை வடகாடு போலீசார் கைது செய்து அறந்தாங்கி கிளைச்சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் கடந்த 1-ந்தேதி புதுக்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்ட கண்ணன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்ததின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் கண்ணன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து இதற்கான உத்தரவு நகலை வழங்கி புதுக்கோட்டை சிறையில் இருந்த கண்ணனை திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

Next Story