வெள்ளகோவில் நகராட்சி எரிவாயு தகன மேடைக்கு கண்காணிப்பு கேமரா


வெள்ளகோவில் நகராட்சி  எரிவாயு தகன மேடைக்கு கண்காணிப்பு கேமரா
x
தினத்தந்தி 12 Jun 2021 5:03 PM GMT (Updated: 12 Jun 2021 5:03 PM GMT)

வெள்ளகோவில் நகராட்சி எரிவாயு தகன மேடைக்கு கண்காணிப்பு கேமரா

வெள்ளகோவில்,
வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் வசதிக்கேற்ப வெள்ளகோவில் நகராட்சிக்குட்பட்ட கணபதிபாளையத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் ரூ.60 லட்சத்தில் 2013-ம் ஆண்டில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது. 
இந்த எரிவாயு தகனமேடையை வெள்ளகோவில் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இதுநாள் வரை இந்த எரிவாயு தகன மேடைக்கு தினசரி சராசரியாக 2 பிரேதங்கள் மட்டும் வந்து கொண்டிருந்தது. தற்போது கொரோனா நோய்தொற்று காலமாக இருப்பதால் தினசரி 5 பிரேதங்கள் வரை வருகின்றன. 
தற்போது எரிவாயு தகன மேடைக்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தகனமேடை பதிவு செய்ய இறந்தவரின் மருத்துவ சான்று, இறந்தவரின் அடையாள ஆவணங்கள் மற்றும் பதிவு செய்ய வருவோரின் அடையாள ஆவணத்துடன் வெள்ளகோவில் நகராட்சிக்கு ரூ.2 ஆயிரம் பதிவு கட்டணம் செலுத்த வேண்டுமென நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எரிவாயு தகனமேடை பதிவுக்கு 04257-260580. தகனமேடை குறித்த புகாருக்கு 9842713583 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Next Story