காங்கேயத்தில் விற்பனைக்கு வைத்திருந்த 105 கர்நாடக மதுபாக்கெட்டுகள் பறிமுதல் 4 பேர் கைது


காங்கேயத்தில் விற்பனைக்கு வைத்திருந்த 105 கர்நாடக மதுபாக்கெட்டுகள் பறிமுதல் 4 பேர் கைது
x
தினத்தந்தி 12 Jun 2021 10:39 PM IST (Updated: 12 Jun 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

காங்கேயத்தில் விற்பனைக்கு வைத்திருந்த 105 கர்நாடக மதுபாக்கெட்டுகள் பறிமுதல் 4 பேர் கைது

காங்கேயம்
கொரோனா ஊரடங்கு காரணமாக காங்கேயத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து காங்கேயம் போலீசார் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதை நோட்டமிட்டு வந்தனர். இந்த நிலையில் காங்கேயத்தில் உள்ள திருப்பூர் சாலை-வனிதா கல்வி நிலையப் பகுதி, ஏ.சி.நகர், ராஜாஜி வீதி, தாராபுரம் சாலை-கோட்டைமேடு ஆகிய பகுதிகளில் அனுமதியில்லாமல் மது விற்பனை நடைபெற்றது தெரியவந்தது.
இதையடுத்து இந்த பகுதிகளில் சட்டவிரோதமாக கர்நாடக மது விற்றதாக திருப்பூர்-நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நடராசன் (வயது 48), திருப்பூர்-வாளவாடி பகுதியைச் சேர்ந்த அஜீத்குமார் (22), விழுப்புரம்-சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (45), காங்கேயம்-கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ரத்தினசாமி (54) ஆகிய 4 பேரை காங்கேயம் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கர்நாடகா மாநிலத்தில் இருந்து விற்பனை செய்வதற்காக வாங்கி வரப்பட்ட 105 மதுப்பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story