மானாமதுரை,
மானாமதுரை யூனியன் அலுவலகத்தில் யூனியன் தலைவர் லதா அண்ணாத்துரை தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஒன்றிய கவுன்சிலர் அண்ணாத்துரை, பொறியாளர் தேவி சங்கரி, துணை வட்டார வளர்ச்சி அதிகாரி காளிமுத்து மற்றும் யூனியன் அலுவலர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்று கொண்டனர். அதில், கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்தமாட்டேன். குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என உறுதிமொழி எடுத்து கொண்டனர்.