புகளூர் வாய்க்காலில் தேங்கியுள்ள சாக்கடை பிளாஸ்டிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்


புகளூர் வாய்க்காலில் தேங்கியுள்ள சாக்கடை பிளாஸ்டிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 12 Jun 2021 11:23 PM IST (Updated: 12 Jun 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

புகளூர் வாய்க்காலில் தேங்கியுள்ள சாக்கடை பிளாஸ்டிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நொய்யல்
தேங்கி நிற்கும் கழிவுநீர்
ஈரோடு மாவட்டம் காரணாம்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் தடுப்பணையில் இருந்து புகளூர் வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் புகளூர் வாய்க்காலில் தற்பொழுது பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது புகளூர் வாய்க்காலில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரும் சாக்கடை நீர் புகளூர் வாய்க்காலில் பாலத் துறையில் கலக்கிறது. இதனால் வாய்க்காலில்  சாக்கடைநீர் தேங்கி நிற்கிறது. 
நோய் பரவும் அபாயம்
மேலும் பாலத்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வந்த டீக்கடைகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் வாய்க்கால் ஓரத்தில் கொட்டப்பட்டு தற்பொழுது வாய்க்காலுக்குள் சாக்கடை நீரில் மிதந்து தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி, ெகாசுக்கள் உற்பத்தி அதிகரித்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
இதனால் கொசு தொல்லையும் அதிகமாக காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வாய்க்காலில் தேங்கி நிற்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story