திருநங்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி


திருநங்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி
x
தினத்தந்தி 12 Jun 2021 11:33 PM IST (Updated: 12 Jun 2021 11:33 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் 19 திருநங்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதியை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.

நாகர்கோவில்:
நாகர்கோவிலில் 19 திருநங்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதியை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.
19 திருநங்கைகள் 
குமரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் திருநங்கைகளுக்கு முதல்-அமைச்சரின் கொரோனா சிறப்பு நிவாரண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு 19 திருநங்கைகளுக்கு தலா ரூ.2000 கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
திருநங்கைகளை சமூகத்தில் மற்றவர்கள் புறம் தள்ளி வைத்திருந்த நேரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, அவர்களையும் அங்கீகரிக்க வேண்டும், சமூகத்தில் அவர்களும் அந்தஸ்தோடு வாழ வேண்டும் என்பதற்காக ‘திருநங்கைகள்’ என்று பெயர் சூட்டி பெருமை சேர்த்து, அழகுபார்த்தார். மேலும் அவர்களுக்கென நலவாரியமும் அமைத்தார். அவர்களின் குறைகள், கோரிக்கைகளை நிறைவேற்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து, இன்றைக்கு திருநங்கைகள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தியவர் கருணாநிதி. அவர் வழியில் செயல்படும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து தரப்பட்டமக்களும், தமிழக அரசின் திட்டங்கள், நிவாரண உதவிகளை பெற்று, உயர்வுற்று வாழ வேண்டும் என்ற அடிப்படையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி
கொரோனா தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட தமிழக மக்களின் நிலைமையை கருத்தில்கொண்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4000 நிவாரணத்தொகை, 14 வகையான மளிகைப்பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு உள்ள திருநங்கைகள் பயனடைவார்கள். ரேஷன் கார்டு இல்லாத திருநங்கைகளுக்கு உதவும் நோக்கில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 19 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண தொகை ரூ.2000 வீதம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் விஜயகுமார் எம்.பி., எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி, கண்காணிப்பாளர் பிரின்ஸி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story